உயிர்க் காரணிகள்
விதை சம்பந்தமானவை மற்றும் மற்ற உயிர்க் காரணிகள்
மரபியல் காரணிகள்
விதையின் மரபியல் தன்மையானது அதன் சேமிப்பைப் பாதிக்கின்றது. சில வகை விதைகள் இயற்கையாகவே குறுகிய கால வாழ்வு கொண்டவை. எ.கா வெங்காயம், சோயாபீன்ஸ், நிலக்கடலை போன்றவை மரபியல் தன்மையைக் கொண்டு விதைகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
நுண்ணுயிர் - குறுகிய வாழ்நாள்
நடுத்தர உயிர் - மிதமான வாழ்நாள்
பேருயிர் - நீண்ட வாழ்நாள்
முன் விதைத்தரம்
பார்டன் (1941) என்பவரின் கூற்று யாதெனில், “குறைந்த வீரியமுள்ள விதைகளைக் காட்டிலும் முன்பே அதிக வீரியமுள்ள விதைகள் சாதகமில்லாத சேமிப்பு சூழ்நிலைகளை எதிர்க்கும் ஆற்றல் நிறைந்தவையாக இருக்கும். அடிப்பட்டு காயமடைந்த விதைகள் தம் வீரியத்தன்மையை விரைவில் இழந்துவிடும். பெரிய விதைகளை காட்டிலும் சிறிய விதைகள், சேதமடைவது குறைவாகும். (எ.கா) பீன்ஸ், லிமா பீன்ஸ் மற்றும் சோயாபீன்ஸ், உருண்டை வடிவுள்ள விதைகள் தட்டையான மற்றும் தாறுமாறான வடிவ விதைகளை விட பாதுகாப்பானவையாகும்.
விதைத் தோற்றத்தின் விளைவு
விதைத் தோன்றிய (அ) உற்பத்தியான இடத்தைப் பொருத்து சேமிக்கும் திறன் மாறுபடும். (எ.கா) க்ளோவர் (சிகப்பு வகை) என்ற பயிரின் சேமிப்புக் காலம் கனடாவில் 4 வருடம் (80 சதவிகிதம் முளைப்புத் திறன்) ஆகவும், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்தில் 3 வருடமாகவும் இருந்தது. இரு வேறு பகுதிகளின் மாறுபட்ட மண் தன்மை மற்றும் தட்பவெப்பச் சூழல் காரணமாக இருக்கலாம்.
காற்றின் அளவு
ஏற்றத்தாழ்வு கொண்ட வெப்பநிலை, விதை உருவாகுவதையும் அதன் முதிர்ச்சியையும் பாதிக்கும். அறுவடைக்கு முன் பெய்யும் மழையும் விதையின் வீரியத்தை கட்டுப்படுத்தும்.
சுகாதாரத்திற்கான அறுவடைக்கு முன் மருந்து இடுதல்
பயிறு வகைகளில், பூச்சித் தாக்குதலானது நிலங்களில் இருந்தே தொற்றுகிறது. (எ.கா) பயிறு வண்டுகள். |